சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடமாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கருங்கல்பாளையம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கருங்கல்பாளையம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
பணி இடமாற்றம்
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் துரைசாமி. இவர் காஞ்சிக்கோவில் பகுதியில் நடந்த ஒரு கோவில் பிரச்சினை தொடர்பாக வந்த புகாரின் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு சென்றது. இதையடுத்து அவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமியை ஈரோடு மாவட்ட ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
போலீஸ் ஏட்டு
இதேபோல் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நித்தியானந்தம். இவர் கருங்கல்பாளையம் பகுதியில் நடந்த சட்ட விரோத செயல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு நித்தியானந்தத்தை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.