கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு


கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு
x

விருதுநகர் அருகே கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின்நிலையத்தில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயர் தேன்மொழி, நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.



Next Story