வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் திருடிய திருநங்கை கைது


வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் திருடிய திருநங்கை கைது
x

கோவையில் ஆசீர்வதிப்பது போல நடித்து வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் திருடிய திருநங்கை கைது செய்யப்பட்டார்

கோயம்புத்தூர்

கோவையில் ஆசீர்வதிப்பது போல நடித்து வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் திருடிய திருநங்கை கைது செய்யப்பட்டார்.

ஜவுளி வியாபாரி

கோவை விமான நிலையம் அருகே ஜி.ஆர்.ஜி. நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மரியபிரதீப் (வயது 42). இவர் திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி தனது மனைவியுடன் காரில் கொடிசியா அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே அவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி பேசிக்கொண்டு இருந்தார்.

ஆசீர்வாதம்

அப்போது இருசக்கர வாகனத்தில் 3 திருநங்கைகள் வந்தனர். அதில் ஒருவர் மரியபிரதீப்பின் கார் கண்ணாடியை தட்டி பணம் கேட்டனர். உடனே அவர் தனது மணிபர்சை எடுத்து அதில் இருந்து ரூ.10-ஐ எடுத்து அந்த திருநங்கையிடம் கொடுத்தார்.

அதை பெற்றுக் கொண்ட அந்த திருநங்கை மரிய பிரதீப்பை ஆசீர்வாதம் செய்வது போல் தலையில் கையை வைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது மரியபிரதீப்பின் பர்சில் இருந்த ரூ.8 ஆயிரத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மரியபிரதீப், பீளமேடு போலீசில் கொடுத்த புகாரில், தன்னிடம் பணம் பெற்ற திருநங்கை மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

திருநங்கை கைது

அதில், மரியபிரதீப்பிடம் இருந்து பணம் பெற்றது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த திருநங்கை இளவஞ்சி (31) என் பது தெரிய வந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர் மரியபிரதீப்பின் தலையில் கை வைத்து ஆசீர்வதிப் பது போன்று நடித்து பர்சில் இருந்து ரூ.8 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story