கஞ்சா வாலிபரை சரமாரியாக தாக்கிய திருநங்கைகள்
செங்கத்தில் கஞ்சா வாலிபரை திருநங்கைகள் சரமாரியாக தாக்கினர்.
திருவண்ணாமலை
செங்கம்
செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் செங்கம் பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
வாலிபர் விக்னேஷ் நேற்று இரவு செங்கம் புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா போதையில் திருநங்கையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் திருநங்கையின் தோழிகளான 4 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து கஞ்சா போதையில் தொந்தரவு செய்த வாலிபரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
பஸ் நிலையத்தில் சுற்றி சுற்றி திருநங்கைகள் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக பஸ் நிலையத்தின் எதிரே உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் காவலர்கள் உள்பட போலீசார் வந்து விக்னேசை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story