திருநங்கை மர்மச்சாவு


திருநங்கை மர்மச்சாவு
x

பாணாவரத்தில் திருநங்கை மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

பாணாவரத்தில் திருநங்கை மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). நாடக கலைஞரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் சக்தி என்ற பெயரில் திருநங்கையாக மாறினார். சில மாதங்களுக்கு முன் தனது தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய இவர், அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவ்வப்போது குடும்ப பிரச்சினை குறித்து தனது தாயிடம் பேசுவாராம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும். இதேபோல் நேற்றி முன்தினம் இரவு தனது தாயின் வீட்டுக்கு சென்ற சக்தி, அவரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் விரக்தியில் இருந்த அவர், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மர்மச்சாவு

அவரை அவதது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் தடுத்து சமரசம் செய்தனர். பின்னர் தனது வாடகை வீட்டுக்கு சென்ற சக்தி நேற்று காலை வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சக்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் வாயில் ரத்தக்கறை படிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவரது தாய், பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சக்தியின் செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சில நாட்களுக்கு முன் சக்தி, தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போன்று செல்போனில் புகைப்படம் வடிவமைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story