போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு: கிளை மேலாளரின் அனுமதி அவசியம் - போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்


போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு: கிளை மேலாளரின் அனுமதி அவசியம் - போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்
x

கோப்புப்படம்

போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பல அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊழியர்கள் விடுப்பு தொடர்பான நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படாததால் போக்குவரத்துத்துறை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

அதன்படி, போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளர்களிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துத்துறையில் உள்ள அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி விடுப்பு வழங்கும் முறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story