திருவட்டார் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவட்டார் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
திருவட்டார் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் பழுதான பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்தும் திருவட்டார் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எச்.எம்.எஸ். தொழிற்சங்க மண்டல தலைவர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ஈஸ்வரபிரசாத், துணை பொதுசெயலாளர் கே.லெட்சுமணன், பொருளாளர் எம். லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாநில பொதுசெயலாளர் சுப்பிரமணிய பிள்ளை, திருவட்டார் பணிமனை செயலாளர் வினுகுமார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story