போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தமிழக கவர்னரை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று அதிகாலை திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மத்திய சங்க பொருளாளர் சிங்கராயர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்தும், அவரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியும், மத்திய அரசு தமிழக கவர்னரை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story