போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பெரம்பலூர் பணிமனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மத்திய சங்க பொருளாளர் சிங்கராயர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போக்குவரத்து ஊழியர்கள் தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறைக்கான மானிய கோரிக்கையில் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். தற்போது பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவை, அகவிலைப்படி நிலுவை, கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கான சிறப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story