போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர் .

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் , இந்த வழக்கு நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story