பெரியமலை அடிவாரத்தில் மரக்கன்று நடும் விழா


பெரியமலை அடிவாரத்தில் மரக்கன்று நடும் விழா
x

சோளிங்கர் பெரியமலை அடிவாரத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் கிராமத்தில் யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ள பெரியமலை அடிவாரத்தில் கோ கிரீன் தன்னார்வலர்கள் சார்பில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல வகையான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் எம்.கோபி, அரிமா சங்க ஆளுனர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு மா, பலா, வேம்பு, வேங்கை, புங்கை, சிவப்பு சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான 200 மரக்கன்றுகள் நட்டனர்.

இதில் நகராட்சி உறுப்பினர்கள் அருண்ஆதி, லோகேஸ்வரி சரத்பாபு, ராதாவெங்கடேசன், கோ கிரீன் தன்னார்வலர்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story