மரத்தை வேருடன் பிடுங்கி மறு நடவு
மரத்தை வேருடன் பிடுங்கி மறு நடவு
கோயம்புத்தூர்
கோவை
கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 30 ஆண்டுகள் பழமையான வாகை மரம் உள்ளது. அது அங்கு பணிகள் செய்ய இடையூறாக இருந்தது. எனவே அந்த மரத்தை வேருடன் பிடுங்கி ேவறுஇடத்தில் மறுநடவு செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, கோவை மரங்கள் மறுவாழ்வு இயக்க தலைவர் ஓசை சையத் ஒத்துழைப்புடன், அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப் பட்டன. இதையடுத்து, அந்த மரத்தை கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அகற்றி, 30 மீட்டர் தூரத்தில் போக்குவ ரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையோரத்தில் மறுநடவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story