சுள்ளிபாளையம் ஊராட்சியில் வண்டி பாதை ஆக்கிரமிப்பு மரங்கள் அகற்றம்
சுள்ளிபாளையம் ஊராட்சியில் வண்டி பாதை ஆக்கிரமிப்பு மரங்கள் அகற்றம்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள சுள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டவலசு பகுதியில் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் அரசு புறம்போக்கு வண்டி பாதையில் இருபுறமும் தென்னை, பனை மற்றும் வேப்ப மரங்கள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றகோரியும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வண்டி பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று சுள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி, ஜேடர்பாளையம் வருவாய் ஆய்வாளர் காந்திமதி, சுள்ளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, மற்றும் நல்லூர் போலீசார் ஆக்கிரமிப்பு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து புறம்போக்கு வண்டி பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 4 தென்னை, பனை மற்றும் வேப்ப மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.