சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள்


சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள்
x

வனப்பகுதியில் தேன் எடுக்கும்போது மரத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி மலைவாழ் மக்கள் தூ்க்கி வந்தனர்.

திருப்பூர்

தளி

வனப்பகுதியில் தேன் எடுக்கும்போது மரத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி மலைவாழ் மக்கள் தூ்க்கி வந்தனர்.

மலைவாழ்மக்கள்

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டுமலை, கோடந்தூர், பொறுப்பாரு, தளஞ்சி, தளிஞ்சிவயல், ஈசல் தட்டு, குலிப்பட்டி, குருமலை, மேற்குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் வடுமாங்காய் பறித்தல், தேன் எடுத்தல் போன்ற உயிரை பணயம் வைக்கும் சுய தொழில்களிலும் ஈடுபட வேண்டிய சூழல் மலைவாழ் மக்களுக்கு ஏற்படுகிறது.

அந்த வகையில் நேற்று ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன் (வயது 65) என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் அவரை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி வந்தனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

கோரிக்கை

அவசரகால உதவிகள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை மற்றும் ஆரம்ப கால அரசியல் சுகாதார நிலைய வசதி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையிலே இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. பிரசவம், எதிர்பாராமல் நடக்கும் விபத்து, அவசர கால உதவியை பெறுவதற்கு வனப்பகுதி வழியாக பயணித்து அடிவாரத்தை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

.எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி வனப்பகுதியில் பாதை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தேன்எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்ற உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் தொழில்களுக்கு தகுந்த உபகரணங்களும், விழிப்புணர்வும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story