ஆஷ் துரை நினைவிடத்தில் மரியாதை
பாளையங்கோட்டையில் சமூக நீதிக்கான கூட்டு இயக்கங்கள் சார்பில் ஆஷ் துரை நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்தவர் ஆஷ் துரை. அவரை வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஷ்துரையின் நினைவு நாளையொட்டி சமூக நீதிக்கான கூட்டு இயக்கங்கள் சார்பில் பாளையங்கோட்டை குளோரிந்தா கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உள்ள ஆஷ்துரை நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி, திராவிட தமிழர் கட்சி திருக்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், தமிழ் புலிகள் கட்சி தமிழரசு, ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், ஆதித்தமிழர் கட்சி ராமமூர்த்தி, வக்கீல்கள் பிரபு ஜீவன், அப்துல் ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story