தற்கொலை செய்த டி.ஐ.ஜி.க்கு அஞ்சலி


தற்கொலை செய்த டி.ஐ.ஜி.க்கு அஞ்சலி
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்த டி.ஐ.ஜி.க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மறைந்த டி.ஐ.ஜி. விஜயகுமார் படத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குற்றப்பிரிவு முருகேசன், ஆயுதப்படை முருகராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் அமைச்சு பணியாளர்கள், போலீசார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1 More update

Related Tags :
Next Story