சேலத்தில்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


சேலத்தில்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

சேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம்

சேலம்

சேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு நாளையொட்டி சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி.சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, திருமுருகன், 29-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா குமரேசன், விவசாய பிரிவு தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நற்பணி மன்றம்

இதேபோல், காந்தி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மன்ற ஆலோசகர் பொன்முடி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மன்ற தலைவர் கோவை சுந்தரம், ஓடெக்ஸ் இளங்கோவன், மான் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உறுதிமொழி

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் பாலர் பூங்கா சார்பில் சேலத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு காந்தியின் முகமூடி அணிந்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Related Tags :
Next Story