திருச்சி தொழில் அதிபர் கைது
திருச்சி தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதன் அலுவலகங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும், பணம் இரட்டிப்பாக மாறும் என்பது உள்ளிட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சென்றனர். இதை நம்பி பொதுமக்கள் கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிறுவனத்தினர் முதலீட்டாளர்களிடம் பல கோடி மோசடி செய்ததாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகளான ராஜா, சுரேஷ், கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் எல்பின் நிறுவன உரிமையாளராக பதிவு செய்யப்பட்ட ெதாழில் அதிபர் திருச்சியை சேர்ந்த பாதுஷாவை (வயது 57) சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.