திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை


திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை
x

திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலை இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம் உட்பட பல்வேறு இடங்களில் மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 3 துணை ஆணையர்கள் தலைமையில் 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story