திருச்சி: கூத்தப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் அவிழ்த்துவிடப்படுவதுடன், 450 மாடுபிடி வீரர்களும் காளைகளை துடிப்புடன் அடக்கிவருகின்றனர்.
திருச்சி,
பொங்கல் பண்டிகைக்கு மதுரையில் உலக புகழ்பெற்ற பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் கூத்தப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் அவிழ்த்துவிடப்படுவதுடன், 450 மாடுபிடி வீரர்களும் காளைகளை துடிப்புடன் அடக்கிவருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை உரிமையாளருக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story