திருச்சி - ராமேசுவரம் ரெயில் பகுதியாக ரத்து
திருச்சி - ராமேசுவரம் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி
பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரெயில் சேவைகள் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16849 திருச்சி - ராமேசுவரம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் மறு ஆலோசனை வரும் வரை ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே செல்லும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16850 ராமேசுவரம் - திருச்சி முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் நேரடி பயணத்தை தொடங்கும்.
Related Tags :
Next Story