திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அம்மன் சிம்மவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். நேற்று காலை 7 மணிக்கு காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னி சட்டி எடுத்து வரப்படுகிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் கிடா வெட்டு பூஜை, அன்னதானம் நடக்கிறது.