திருச்சி காந்தி மார்க்கெட்டில் சதம் அடித்த சின்ன வெங்காயம்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் சதம் அடித்த சின்ன வெங்காயம்
x

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் சதம் அடித்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருச்சி

சின்ன வெங்காயம்

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்தும், கோவை மாவட்டத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.80 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கியது.

இந்தநிலையில் தற்போது முதல் தரமான வெங்காயம் மொத்த விற்பனை கடையிலேயே கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சின்னவெங்காயம் விலை இதுபோல் கட்டுக்கடங்காமல் உயர்ந்திருந்தது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் காந்திமார்க்கெட்டில் ரகத்துக்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.60-க்கு சின்ன வெங்காயம் கிடைக்கிறது. பெரிய வெங்காயமும், ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து விலை உயர்ந்து உள்ளது. வரக்கூடிய நாட்களிலும் அதன் விலை சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுவதால், இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

1 More update

Next Story