அரசு கலைக்கல்லூரியில் முப்பெரும் விழா


அரசு கலைக்கல்லூரியில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு பயிற்சி , கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாணவி ருத்ராதேவி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருமேணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை மேம்படுத்தி சமுதாயத்தில் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக வரவேண்டும் என வாழ்த்தி பேசினார். தொடர்ந்து 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நான் முதல்வன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன், கல்லூரி துறைத்தலைவர்கள் மணிகண்டன், தமிழ்செல்வன், வெங்கடாசலம், மணிசேகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story