நூலகத்தில் முப்பெரும் விழா


நூலகத்தில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் கோடை கொண்டாட்டம், புத்தகம் வெளியீடு, உலக கலாசார பன்முக தன்மை நாள் என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு வாசகர் வட்ட குழுத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமை வகித்தார். தமிழ் சங்க நிர்வாகிகள் சி.விக்கிரமன், தொ.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். திருக்குறள் கழக அறக்கட்டளை துணை தலைவர் உலகமாதேவி தொடக்க உரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பெ.அரவிந்தன் கலந்து கொண்டு அருள்நாதன் தங்கராசு எழுதிய தந்தை பெரியார், கவிச்சுடர் பி.மணிமாலை எழுதிய அற்புதத் தெய்வம் சாய் எனும் இரு புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் தமிழ்ப்பணி செம்மல் என்ற விருதையும் வழங்கினார். இதில் முதல் புத்தகத்தை கல்வியாளர் தமிழ்ச்செல்வன், குமாரசாமியார், அறக்கட்டளை தலைவர் தணிகை கலைமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கவிநிலவன், சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் சு.சண்முகசுந்தரம், பாவலர் முத்தமிழ், அறங்காவலர் வ.கவுரி மயூரநாதன், பெ.ரமேஷ், நூலகர் வி.தியாகராசன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தலைவர் மு.கலியபெருமாள், தலைமை ஆசிரியர் மு.ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் சி.தானிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சுதாகரன், வாசுகுரு, அய்யப்பன், மித்ராதேவி, சு.சம்பத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் நூலகர் ரா.வசந்தி நன்றி கூறினார்.


Next Story