ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி-பஸ்-கார் மோதல்; 16 பேர் காயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி-பஸ்-கார் மோதிய விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ஓசூர் நோக்கி சென்றது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி எதிரே வந்த செல்போன் உதிர் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனதில் வேலை ஆட்களை ஏற்றி வந்த தனியார் பஸ் மற்றும் காரின் மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தனியார் நிறுவன பஸ் மற்றும் கண்டெய்னர் லாரி முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.
அது மட்டுமல்லாமல் லாரி டிரைவர் மாடசாமி, காரில் வந்த கார்த்திக் மற்றும் முனுசாமி, தனியார் நிறுவன பஸ்சில் வந்த மெர்லின் மேரி, தமிழ்ச்செல்வி, காயத்ரி என 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.