மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: பொறியாளா் சாவு


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: பொறியாளா் சாவு
x

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் பொறியாளா் இறந்தாா்.

ஈரோடு

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள பொன்முடி வடக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவருடைய மகன் கண்ணன் (வயது 22). என்ஜினீயரிங் முடித்துவிட்டு, பெருந்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கண்ணன், தனது சொந்த வேலை காரணமாக, விஜயமங்கலத்திற்கு சென்றார். அங்கு ேவலையை முடித்துக்கொண்டு பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்த போது, அவருக்கு பின்புறமாக வேகமாக வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்ணன் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து, கண்ணனை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கண்ணன் நேற்று இறந்துவிட்டார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story