குண்டுக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது
குண்டுக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் சாலு மற்றும் போலீசார் வள்ளியூர் மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது உரிய அனுமதி சீட்டு இன்றி குண்டு கற்களை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தேவசகாயம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 யூனிட் குண்டு கற்களையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story