சேதமடைந்த தரைப்பாலத்தில் சிக்கிய லாரி


சேதமடைந்த தரைப்பாலத்தில் சிக்கிய லாரி
x

நரிக்குடி அருேக சேதமடைந்த தரைப்பாலத்தில் லாரி சி்க்கி கொண்டது. ேசதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருேக சேதமடைந்த தரைப்பாலத்தில் லாரி சி்க்கி கொண்டது. ேசதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த பாலம்

நரிக்குடி அருகே உள்ள எழுவனி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஏ.முக்குளம் கிராமத்தில் இருந்து எழுவனி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த பாலம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளத்தில் சிக்கிய லாரி

தற்போது பெய்த மழையினால் பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்தநிலையில் அந்த வழியாக பஞ்சு ஏற்றி சென்ற லாரி ஒன்று சேதமடைந்த பாலத்தில் உள்ள பள்ளத்தில் சிக்கி கொண்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த லாரி மீட்கப்பட்டது. அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக மேற்கண்ட பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story