விதிமுறைகளை மீறி சவுடுமண் கொண்டு செல்லும் லாரிகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


விதிமுறைகளை மீறி சவுடுமண் கொண்டு செல்லும் லாரிகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

விதிமுறைகளை மீறி சவுடு மண் கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் காஞ்சீபுரம், அரக்கோணம், திருவள்ளூர், மப்பேடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் சவுடு மண் கொண்டு செல்லப்படுகிறது.

அவ்வாறு செல்லும் லாரிகள் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக அதிக அளவு பாரங்களை ஏற்றியும், அதன் மீது தார் பை போடாமல் அதிவேகமாக சொல்லுகிறது. அதன் காரணமாக நெடுஞ்சாலையில் அந்த லாரிகளின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மண் துகள்கள் பட்டு விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறி சவுடு மண் கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story