ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு


ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
x

ஆம்பூர் அருகே ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் கற்கள் மற்றும் ஜல்லி கற்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்தநிலையில் அதிகமான லாரிகள் அந்தப்பகுதி வழியாக செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சமவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story