ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி - 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு


ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி - 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x

ராயபுரத்தில் ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னை காசிமேடு திரவுபதி அம்மன் கோவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 39). பிரபல ரவுடியான இவர், நேற்று மாலை ராயபுரத்தில் பள்ளியில் படிக்கும் மகளை அழைத்து செல்ல காசிமேடு சூரிய நாராயண தெருவில் உள்ள டீக்கடை அருகே வந்த போது மர்ம நபர்கள் 5 பேர் ஒடஒட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காசிமேடு போலீசார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டு இருந்த செந்திலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவுன்குமார் ரெட்டியிடம் பிரமாண பத்திரத்தில் எழுதி கொடுத்து வந்ததாகவும், முன்விரோதத்தில் மர்மநபர்கள் வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது, இதனையடுத்து தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story