இளம்பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி


இளம்பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
x

பேட்டையில் இளம்பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் சங்கிலி பறிக்க முயன்றார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை ரகுமான் பேட்டையை சேர்ந்தவர் சதாம் உசேன். இவர் பிளம்பிங், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபைதா பர்வீன் (வயது 22). இவர் நேற்று காலை தனது கைக்குழந்தையுடன் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது முகத்தை வெள்ளை நிற கைக்குட்டையால் மூடிய 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சுபைதா பர்வீன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். சங்கிலி அறுந்த நிலையில் சுதாரித்த சுபைதா பர்வீன், திருடனின் கையை பிடித்துள்ளார். ஆனால் திருடன் சுபைதா பர்வீன் கையை தட்டி உதறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதனால் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலி தப்பியது.

தகவல் அறிந்ததும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story