காசநோய் விழிப்புணர்வு முகாம்


காசநோய் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நீலகிரி

குன்னூர்

தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதியவர்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் காசநோய் பிரிவு சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் தொழிலாளர்களுக்கு காசநோய் மற்றும் நுரையிரல் சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் எம்.ஏ.ரகீம் மற்றும் தலைமை மருத்துவ சூப்பர்வைசர் சரத்குமார், ஆண்டனி செபஸ்டின், ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story