காசநோய் கண்டறிதல் முகாம்
காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
கரூர்
தவுட்டுப்பாளையத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமில், பொதுமக்களை காசநோய் குறித்த எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்திற்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு நுரையீரல், நெஞ்சு புகைப்படம் எடுத்து நுரையீரலில் சளி தொற்று, காச நோய் உள்ளதா என்றும் எக்ஸ்ரே பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து காசநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பின்னர் ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை செய்தனர். பின்னர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story