தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 1:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த 1994-97-ம் ஆண்டில் பி.எஸ்சி இயற்பியல் பிரிவில் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வரும் முன்னாள் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாங்கள் படித்த கல்லூரி வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்து பல்வேறு மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்களின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பூங்கொடி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நாராயணசாமி, வில்லியம் ஜேம்ஸ், வெள்ளை பாண்டியன், பாஸ்கரன், அருள்மணி, கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் டாக்டர் கனக பிரபா ஒருங்கிணைத்து நடத்தினார்.

1 More update

Next Story