தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்கலை, விளையாட்டு போட்டிகள்


தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்கலை, விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கலை, விளையாட்டு போட்டிகள் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தாமிரபரணி என்ற பெயரில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி செயலாளர் சோமு தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பூங்கொடி முன்னிலை வகித்தார்.

இதனை தொடர்ந்து ஊமை நாடகம், குழு நடனம், வினாடி-வினா, புதுமையான கண்டுப்பிடிப்புகளை வெளிப்படுத்துதல் போன்ற கலைப் போட்டிகளும் கபடி, கைப்பந்து, கோகோ, எறிபந்து போன்ற விளையாட்டு போட்டிகளும் நடந்தன. இந்த போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் தொழில் முனைவதற்கான ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் கல்லூரி தொழில் முனைவோர் வளர்ச்சி அமைப்புடன் இணைந்து சுமார் 20 கடைகள் அமைத்து இருந்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் அசோக், அருணாசல ராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

1 More update

Next Story