தூத்துக்குடியில்காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம்


தூத்துக்குடியில்காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில்காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் துறை அலுவலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். லூர்த்தவாஸ் வரவேற்று பேசினார். செயலாளர் ரமேஷ் விவர அறிக்கையை சமர்ப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு காவலர் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையை வழங்கினார்.

கூட்டத்தில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2021-22-ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபம் பிரிவினை செய்தல், 2022-2023 மற்றும் 2023 - 2024 ஆகிய ஆண்டுகளுக்கு உத்தேச வரவு செலவுத்திட்டம் அங்கீகாரம் செய்தல், சங்க சிறப்பு துணை விதி திருத்தம் ஏற்படுத்துதல், தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடந்தன.

கூட்டத்தில் போலீஸ் துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், மயில்குமார், கணக்காளர் மாரிப்பாண்டி மற்றும் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகி துரைப்பாண்டி நன்றி கூறினார்.


Next Story