இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட வழக்கு.. "இதற்காக தான் கடத்தினேன்" - பகீர் வாக்குமூலம்


இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட வழக்கு.. இதற்காக தான் கடத்தினேன் - பகீர் வாக்குமூலம்
x

ராதாபுரம் அருகே உள்ள ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை கடந்த 13ஆம் தேதி மீட்கப்பட்டது.

நெல்லை,

ராதாபுரம் அருகே உள்ள ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை கடந்த 13ஆம் தேதி மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீசார், கடத்தல்காரரை தேடி வந்தனர்.

சுமார் 10 நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருந்த தனிப்படை போலீசார், பாலக்காடு ஆலூர் அருகே பதுங்கியிருந்த கடத்தல்காரர் உமர்பரூக்கை கைது செய்தனர். நகைக்காக பெண் குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வேறு இடங்களில் குழந்தை கடத்தல் சம்பவத்தில் உமர் பரூக் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story