மசினகுடி அருகே ஜீப் கவிழ்ந்து முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்


மசினகுடி அருகே ஜீப் கவிழ்ந்து முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்
x

மசினகுடி அருகே ஜீப் கவிழ்ந்து முதியவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலையும், ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, முதுமலை வழியாக மற்றொரு சாலையும் செல்கிறது. இந்த நிலையில் கல்லட்டி பகுதியைச் சேர்ந்த முத்தன் (வயது 65) என்பவர் ஒரு ஜீப்பில் முதுமலை தெப்பக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜீப்பை கல்லட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் மகன் பாக்யராஜ் ( 39) என்பவர் ஓட்டினார். அப்போது தெப்பக்காடு பச்சை பாறை பகுதியில் வந்தபோது திடீரென ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பில் பயணம் செய்த முத்தன், டிரைவர் பாக்யராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முத்தன் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மசினகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story