அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்; திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
உதயநிதி ஸ்டாலின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை,
எம்.எல்.ஏ.வாக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. அவர் 3 அரசு செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story