கடத்தூர் கிராமத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆய்வு
கடத்தூர் கிராமத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
சின்னசேலம்
சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட கடத்தூர் கிராமத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. வீதி வீதியாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை, கல்பதித்த சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து எந்தெந்த தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது, எந்தெந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அவர் உரிய பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து அறிக்கை தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகந்நாதன், உதவி பொறியாளர் அசோக்காந்த், மேற்பார்வையாளர் சுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் பேபிஅய்யாசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.