உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை: அறக்கட்டளை அறங்காவலர் தகவல்


உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை: அறக்கட்டளை அறங்காவலர் தகவல்
x
தினத்தந்தி 30 May 2023 1:56 AM GMT (Updated: 30 May 2023 4:14 AM GMT)

அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள சொத்து முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை அறக்கட்டளை அறங்காவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை என்று அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது. அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள சொத்து முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை. அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது"

ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும், எங்கள் அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அமலாக்கத்துறை முடக்கிய ரூ 34 லட்சத்தை தகுந்த ஆவணங்களை கொடுத்து சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகளை முறையாக வருமான வரித்துறையிடம் செலுத்தி வருகிறோம். முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக செயல்படுகிறோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story