உடுமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உடுமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மக்கள் நலனுக்கும், தமிழக வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மலையாண்டிபட்டணம் மற்றும் மலையாண்டி கவுண்டனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உடுமலை கிழக்கு ஒன்றிய தலைவர் சி.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அப்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை கண்டிக்கத்தவறியது, ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டவும், மண், கல்குவாரிகள் செயல்பாட்டில் ஊழல் மலிந்து கனிம வளக்கொள்ளை நடந்து வருவது குறித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டிக்க தவறியது குறித்தும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில் பங்காரு, உடுமலை கிழக்கு ஒன்றிய கூட்டுறவு பிரிவு தலைவர் என்.வினோத்குமார் உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.