யுகாதி பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


யுகாதி பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x

யுகாதி பண்டிகையையொட்டி எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் சாதி, மத வேறுபாடின்றி பல ஆண்டுகளாக சகோதர, சகோதரிகளாய் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும், தமிழ் மக்களின் இதயத்துடன் இரண்டறக் கலந்து, உள்ளத்தில் ஒன்றிணைந்து, அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கேற்று நட்புணர்வுடன் பழகி வருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.

தமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story