பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்


பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 6 Feb 2023 10:28 AM GMT)

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு, பருத்தி பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

பயிர் காப்பீட்டுத்திட்டம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம், விவசாயிகளுக்கு காலம் தவறி பெய்த கனமழை இழப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-23 ரபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

பிரீமியம் தொகை

அதன்படி வருகிற 15-ந்தேதிக்குள் ஒரு ஏக்கர் உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு பிரீமியம் தொகையாக ரூ.78 செலுத்த வேண்டும். அதேபோல மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் ஒரு ஏக்கர் பருத்திக்கு பிரீமியம் தொகையாக ரூ.820 செலுத்த வேண்டும். எனவே விவசாயிகள் இறுதி நேரம் வரை காத்திருந்து ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீட்டுத்தொகையினை செலுத்தி முன் கூட்டியே பதிவு செய்யலாம். மேலும் விவசாயிகள் பதிவு செய்த விண்ணப்பத்தினை பெற்று கொள்ளும் போது வங்கி கணக்கு எண், பயிர் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமம் ஆகிய விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story