வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம்

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த விழாவின் போது 25 பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பதிவு சான்றிதழ்கள் மற்றும் உணவு பாதுகாப்பு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான வயது தளர்வு முகாமை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார்.






