மகா மாரியம்மன் கோவிலில் ரூ.18¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்


மகா மாரியம்மன் கோவிலில் ரூ.18¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
x

மகா மாரியம்மன் கோவிலில் ரூ.18¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் கோவிலில் இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை திருவாரூர் உதவி ஆணையர் மணவழகன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், அய்யப்ப சேவா சங்கத்தினர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக 356 கிராம் தங்கம், 900 கிராம் வெள்ளி மற்றும் 18 லட்சத்து 77 ஆயிரத்து 969 ரூபாய் வசூலாகி இருந்தது.

1 More update

Next Story