அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் ஆட்டோ, வேன், கார் டிரைவர்களுக்கு சீருடை


அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் ஆட்டோ, வேன், கார் டிரைவர்களுக்கு சீருடை
x
தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM IST (Updated: 25 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் ஆட்டோ, வேன், கார் டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆண்டுதோறும் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ, வேன், கார், லாரி டிரைவர்களுக்கு ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தனது சொந்த நிதியில் இருந்து டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார். சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், நகர அவைதலைவர் சிவக்குமார், வாடகை கார் டிரைவர், உரிமையாளர்கள் சங்க தலைவரும், பேரூராட்சி துணை தலைவருமான இந்தியன் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், 500-க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், நகர துணை செயலாளர் அலாவுதீன், பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை தலைவர் ஆனந்த கிருஷ்ணன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் புகழேந்தி, மாவட்ட தொழிலாளர் அணி துணைதலைவர் ஞானிசெந்தில், பிரதிநிதி குடோன் மணி, கவுன்சிலர் மணிசேகரன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் எம்.சூரக்குடியை சேர்ந்த டிரைவர்களுக்கு தொழிலதிபரும், தி.மு.க. நகர அவை தலைவருமான சிவக்குமார் தலைமையில் சீருடை வழங்கப்பட்டது. மருதிப்பட்டி, அரளிப்பட்டி, கதிர்காமம், மருதிபட்டியில் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் இலாசுதீன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story