முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் - தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் சுற்றறிக்கை


முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் - தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் சுற்றறிக்கை
x

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரிய இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

கடந்த 10-ந்தேதி சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து தான் மின்சாரம் வந்தது. இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இது திட்டமிட்ட சதிச்செயல் என்று அரசு மீது பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். ஆனால் பழுது காரணமாகவே மின்தடை ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்பட்டதாகவும் மின்சார வாரியம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை மின்சாரம் இல்லையென்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மின்வாரிய ஊழியர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்றும் மின்வாரிய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.



Next Story